Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரையில் மயங்கி விழுந்து இறந்த அப்துல் ரஹீம்: போலீசார் மீது பழிபோட்ட மருமகன் - ஜமாத்தார் முன்னிலையில் எழுதிக் கொடுத்து மன்னிப்பு கேட்பு!

மதுரையில் மயங்கி விழுந்து இறந்த அப்துல் ரஹீம்: போலீசார் மீது பழிபோட்ட மருமகன் - ஜமாத்தார் முன்னிலையில் எழுதிக் கொடுத்து மன்னிப்பு கேட்பு!

மதுரையில் மயங்கி விழுந்து இறந்த அப்துல் ரஹீம்: போலீசார் மீது பழிபோட்ட மருமகன் - ஜமாத்தார் முன்னிலையில் எழுதிக் கொடுத்து மன்னிப்பு கேட்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 April 2020 6:22 AM GMT

மதுரை கருப்பாயூரணியில் இயற்கையாக மயங்கி விழுந்து இறந்த மாமனாரை, போலீசார் அடித்ததால் இறந்ததாக கூறிய மருமகன், பிரேத பரிசோதனைக்கு உடலை கொண்டு செல்ல முயன்றதால், உண்மையை ஒப்புக் கொண்டு மன்னிப்புக்கேட்டார்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி முகமது சேட், அப் பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். தமிழகம் முழு வதும் 144 அமலில் உள்ளது. கருப்பாயூரணியில் பல கடைகள் திறக்கப்பட்டதால், மக்கள் கூட்டம் சேர்ந்தது.

அப்போது, அந்த வழியாக ரோந்துவந்த போலீசார், கடைகளை அடைக்கும்படி கூறினர். அங்கிருந்த முகமது சேட், தன் கறிக்கடையை மூட தாமதம் செய்தார். கடையை விரைந்து பூட்டும்படி போலீசார் சத்தம் போட்டனர். இந்நிலையில், கடைக்கு வெளியே நின்றிருந்த முகமதுசேட் மாமனார் அப்துல் ரஹீம் (75), திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. கறிக்கடை நடத்திய முக மதுசேட் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று திரண்டு, போலீசார் அடித்ததால் அப்துல்ரஹீம் இறந்ததாக கூறி மறியலில் ஈடு பட்டனர்.

இதையடுத்து அங்கு போலீசார் (குவிக்கப்பட்டனர். செய்தி சேகரிப்புக்காக அங்கு சென்ற நிருபர்களிடமும் "போலீசார் அடித்ததில் அப்துல் ரஹீம் இறந்தார்' என்று பேட்டியளித்தனர். அப்போது டிஎஸ்பி தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். "போலீசார் அடித்ததில் இறந்தார் என்று நீங்கள் கூறினால், உடனடி யாக புகார் கொடுங்கள். நாங்கள் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிட வேண்டும்" என்றனர்.

பிரேத பரிசோதனை என்றவுடன் பதறிப்போன முகம துசேட், "போலீ சார் அடித்ததில் என் மாமனார் இறக்க வில்லை. அவர் திடீரென மயங்கி விழுந்தே இறந்தார். போலீசார் என் கடையை அடைக்கச் சொல்லி மிரட்டி யதால், இவ்வாறு கூறினேன்'' என்றார். இதையடுத்து, அவரது ஜமாத்தார் முன்னிலையில் எழுதிக் கொடுத்து விட்டு, முகமது சேட், தன் மாமனார் அப்துல் ரஹீம் உடலை பெற்றுக் கொண்டார்.

பின்னணியில் இவ்வளவு சம்பவம் நடந்திருக்கும் நிலையில், போலீசார் அடித்ததால் தான் அப்துல் ரஹீம் இறந்தார் என்று எவ்வித ஆதாரமும் இன்றி செய்தி வெளியிட்டுள்ளன தமிழ் ஊடகங்கள்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News