Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டு மாதங்களாக சம்பளம் தராத மகாராஷ்டிர அரசு - அரசு ஊழியர் தற்கொலை!

இரண்டு மாதங்களாக சம்பளம் தராத மகாராஷ்டிர அரசு - அரசு ஊழியர் தற்கொலை!

இரண்டு மாதங்களாக சம்பளம் தராத மகாராஷ்டிர அரசு - அரசு ஊழியர் தற்கொலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 11:19 AM GMT

மகாராஷ்டிராவில் மாநில போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்த அரசு ஊழியர் ஒருவர் தனக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் சரியாக கிடைக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வைரஸ் பரவல் அதிக அளவில் இருக்கும்‌ மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்த அமோல் மாலி அவருக்கு இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்கபப்டாததால் தனது குடும்பத்தில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். போக்குவரத்துக் கழகத்தின் மெக்கானிக் பிரிவில் ஊழியராக பணி புரிந்த இவர் தனது குடும்பத்தை நிதி ரீதியாக ஆதரிக்க‌ இயலாத காரணத்தால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது

இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக அமோல் தொண்டிராம் மலி (35) வியாழக்கிழமை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு தாய்,மனைவி ஐந்து வயது மகன், மூன்று வயது மகள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரைப் போன்று பல மக்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது கேரளாவிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்கொள்ள தருவிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கூட மகாராஷ்டிர அரசாங்கம் ஊதியம் வழங்கவில்லை என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கேரளாவுக்கே திரும்பிச் சென்றனர்.

மகாராஷ்டிரா கருவூலம் மோசமான நிலையில் இருக்கும் நேரத்தில் அமைச்சர்களுகாகு என்று 6 புதிய வாகனங்கள் வாங்க உத்தவ் தாக்கரே அரசாங்கத்தின் ஒப்புதல் கிடைத்தது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார நடவடிக்கைகள்‌ மந்தமாக உள்ளன. மஹாராஷ்டிரா அரசாங்கம் தனது சொந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவே போராடி வருகிறது. ஆனால் ஊழியர்களுக்கு பணம் செலுத்த திணறும் அரசாங்கம் அமைச்சர்களுக்கு 6 புதிய வாகனங்களை வாங்குவதற்கான அங்கீகாரத்தை வழங்கியது. ஊதியம் கொடுக்க திணறி வரும் நிலையில் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ 22,83,086 மதிப்புள்ள இன்னோவா கிரிஸ்டா 2.4 இசட் எக்ஸ் (7 சீட்டர்கள்) வாங்குவதற்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. லிமிடெட் லோயர் பரேல் ஒரு கார் வாங்குவதற்கான உச்சவரம்பு ரூ 20 லட்சம் என்றாலும் மாநில அரசின் நிதித்துறையின் ஒப்புதலுடன் வாகனங்கள் வாங்கும் முடிவை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நிறைவேற்றினார்.


source : https://www.opindia.com/2020/08/maharashtra-government-employee-commits-suicide-for-not-getting-salary/

Next Story