கொரோனா ஒழிப்பு பாட்டு பாடி மக்களை கவர்ந்த மம்தா பானர்ஜி - தொலைபேசியில் அழைத்து பிரதமர் பாராட்டு!
கொரோனா ஒழிப்பு பாட்டு பாடி மக்களை கவர்ந்த மம்தா பானர்ஜி - தொலைபேசியில் அழைத்து பிரதமர் பாராட்டு!

கொரோனா வைரஸால், நாடு முழுவதும் 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநிலங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் மேற்கு வங்க மாநிலம் கண்டிப்பான முறையில் ஊரடங்கு, சமூக விலகல், தனிமைப்படுத்தல், உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வரும் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக அங்குள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜி, காய்கறிகள் வாங்குவதற்காக வந்த மக்களிடம், இடைவெளிவிட்டு நின்று வாங்கவேண்டுமென அறிவுரை கூறினார். மேலும், கொரோனா தொற்று நோய் குறித்து மம்தா பானர்ஜி விழிப்புணர்வு பாடல் ஒன்றையும் வாய் விட்டு பாடியுள்ளார்.
மம்தா அரசின் நடவடிக்கைகளை அறிந்த பிரதமர் நேற்று தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்ததாக மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது. மேலும் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார் என கூறியது.
PM Narendra Modi calls up Mamata Banerjee, praises WB govt's role in fighting COVID-19
— Indus Scrolls (@indusscrolls) March 28, 2020
READ HERE: https://t.co/Zyb1QCCwzd pic.twitter.com/TjWHeP8G38