Kathir News
Begin typing your search above and press return to search.

நேபாளப் பள்ளிகளில் கட்டாயமாகும் சீன மொழி - ஆசிரியர்களுக்கு சீனாவே சம்பளமும் கொடுக்கும் வினோதம்.! #Mandarin #China #Nepal

நேபாளப் பள்ளிகளில் கட்டாயமாகும் சீன மொழி - ஆசிரியர்களுக்கு சீனாவே சம்பளமும் கொடுக்கும் வினோதம்.! #Mandarin #China #Nepal

நேபாளப் பள்ளிகளில் கட்டாயமாகும் சீன மொழி - ஆசிரியர்களுக்கு சீனாவே சம்பளமும் கொடுக்கும் வினோதம்.! #Mandarin #China #Nepal

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Jun 2020 2:21 AM GMT

நேபாளப் பள்ளிகளில் சீன மொழியான மாண்டரின் மொழியைக் கற்றுக் கொடுத்தால் சீனாவே அதன் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதாகக் கூறியதை அடுத்து, பெரும்பாலான நேபாளப்பள்ளிகள் மாண்டரின் மொழியை கட்டாயமாகியுள்ளன.

நேபாள உள்நாட்டு விவகாரங்களில் சீனா தொடர்ந்து அதிக ஈடுபாடு காட்டிவருவதன் ஒரு நீட்சியாகவே இது பார்க்கப்படுகிறது. நேபாளப் பள்ளிகள் இதில் பெரும் ஆர்வம் காட்டி வருவதாக ஹிமாலயன் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிடுகிறது.

ஆனால் நேபாளப் பள்ளிப் பாடத்திட்டத்தை உருவாக்கும் 'பாடத்திட்ட மேம்பாட்டு மையம்' (CDC) யின் விதி முறைகளின் படி, பள்ளிகளில் வெளிநாட்டு மொழியை கட்டாயமாக்க முடியாது. ஒரு ஆப்ஷனாக மட்டுமே வைக்க முடியும். ஆனால் நேபாளப் பள்ளிகள் இந்த விதிமுறைகளை அறிந்திருந்தும், மாண்டரின் ஆசிரியர் சேவைகள் இலவசமாகக் கிடைப்பதால் இவ்விதிமுறைகளை மீற தயாராக உள்ளன.

மேலும் அந்நிய மொழியை பள்ளி நேரங்களில் கற்றுக் கொடுக்கக் கூடாது என்பதும் விதிமுறையாகும். ஆனால் இதையும் காற்றில் விட நேபாளப் பள்ளிகள் முடிவு செய்து விட்டன.

கூடிய விரைவில், திபெத்தை போல நேபாளத்தையும் இணைக்க சீனா முடிவு செய்து விட்டது போலும். நேபாள அரசும் மக்களும் கவனமுடன் இருப்பது அவசியம்.

Source: Times of India

Image Courtesy: Northeast Now

Next Story