Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா: மூணாரில் மிகப்பெரிய மண்சரிவு; தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக அச்சம்.!

கேரளா: மூணாரில் மிகப்பெரிய மண்சரிவு; தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக அச்சம்.!

கேரளா: மூணாரில் மிகப்பெரிய மண்சரிவு; தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக அச்சம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Aug 2020 6:50 AM GMT

கேரளாவில் உள்ள மூணாரில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் பெரு மழை காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவில் பல தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உள்ளூர் அதிகாரிகளின் தகவல்படி, இந்த சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்டது. மழையில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் இப்பகுதியை தொடர்பு கொள்வது மிகவும் சிரமமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்ப தகவல்களின்படி நான்கு இறந்த உடல்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறைந்தது 80 பேராவது அந்த பகுதியில் தங்கி இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படை அங்கே ஒரு குழுவாக சென்றுள்ளனர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 20 வீடுகள் இந்த மண்சரிவில் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டதாக பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (PTI) தெரிவித்துள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் கூறுகையில், அதிகாரிகள் காயமடைந்தவர்களை வான்வழியாக மீட்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

முதல்வர் பினராயி விஜயனின் அலுவலக தகவல்களின்படி, அவர்கள் இந்திய விமானப்படையைத் தொடர்புகொண்டு ஹெலிகாப்டர் சேவைகளை ராஜ மாலாவுக்கு அனுப்பிவைத்து மீட்பு பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இது மிக விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சபரிமலை கோவிலுக்கு போகும் வழியில் இருக்கிற பத்னமிட்டா என்ற இடத்தில் மற்றொரு மண்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரியார் நதியின் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கு இருக்கும் மிகப் பிரபலமான நதிக்கரையில் இருக்கும் சிவன் கோயில் முழுவதும் முழுகும் அளவிற்கு சென்றுள்ளதாகவும், பல்வேறு அணைகளின் அடைப்புகள் திறக்கப்பட்டுள்ளதால் பெரியாரில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Source: Hindustan Times

Image Courtesy: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News