Begin typing your search above and press return to search.
ஹிந்து பெண்ணின் உடலை மயானத்திற்கு சுமந்து சென்ற இஸ்லாமியர்கள், குவியும் பாராட்டு..
ஹிந்து பெண்ணின் உடலை மயானத்திற்கு சுமந்து சென்ற இஸ்லாமியர்கள், குவியும் பாராட்டு..

By :
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த திரௌபதி பாய்(65) என்ற பெண் உடல் நலக்குறைவால் இறந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இறுதிச் சடங்கில் உறவினர்கள் யாரும் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் தாயாரின் உடலை மயானத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என மகன்கள் இருவரும் தவிர்த்துள்ளனர்.
இதனை அறிந்த அருகிலுள்ள இஸ்லாமியர்கள் உடலை மயானத்திற்கு தூக்கிச் செல்வதற்கு முன் வந்தனர், இறந்த பெண்ணின் உடலை 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயானம் வரை சுமந்து சென்று இறுதி சடங்கிற்கு பேருதவியாக இருந்தனர். இது குறித்த 'வீடியோ' காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, அவர்களுக்கு அனைவரும் வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Next Story