100 ஏரிகளை நிரப்பும் 565 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் - மேட்டூர் அணையை தாங்கி நிற்கும் சேலத்திற்கு பிறந்தது விடிவுகாலம்!
100 ஏரிகளை நிரப்பும் 565 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் - மேட்டூர் அணையை தாங்கி நிற்கும் சேலத்திற்கு பிறந்தது விடிவுகாலம்!

மேட்டூர் அணையில் திறக்கப்படும் உபரி நீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு திருப்ப வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது.
முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவுப்படி, சரபங்கா வடிநிலத்தில் உள்ள, 100 வறண்ட ஏரிகளை, நீரேற்று முறை மூலம் நிரப்ப முடியும் என, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இத்திட்டத்தை, 565 கோடி ரூபாயில் செயல்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டது.
இத்திட்டப்படி, மேட்டூர் அணை உபரி நீர், மின் மோட்டார்கள் மூலம், நீரேற்றம் செய்யப்பட்டு, ஓமலுார், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி தாலுகாக்களில் உள்ள, 100 ஏரிகளில் நிரப்பப்படும்.
மேட்டூர் அணை நிரம்பி, காவிரியில் வெளியேறும் உபரி நீர், கொள்ளிடம் வழியாக, வீணாக கடலில் கலக்கிறது.பல டி.எம்.சி., தண்ணீர் வீணாகும் சூழலில், அணை அமைந்துள்ள, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், வறட்சியின் பிடியில் தவிக்கின்றன. இதனை தடுக்கவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
100 ஏரிகளை நிரப்புவதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதோடு, 4,238 ஏக்கர் பயன்பெறும். வறட்சியில் திண்டாடும், நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலுார், கெங்கவல்லி, இடைப்பாடி ஒன்றிய பகுதிகளில், இனி காவிரி பாயும். ஓராண்டுக்குள் திட்டப்பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதான பம்பிங் ஸ்டேஷன், மேட்டூர் அருகேயுள்ள திப்பம்பட்டியில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 11 மாதங்களில் முடிந்து, 100 ஏரிகளும் நிரம்பியிருக்கும்