Kathir News
Begin typing your search above and press return to search.

டிக்டோக்கின் அமெரிக்க செயல்பாடுகளை விலைக்கு வாங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் அமெரிக்காவில் டிக்டோக்கைத் தடை செய்து அதற்கான நிர்வாக உத்தரவை வெளியிடலாம்.

டிக்டோக்கின் அமெரிக்க செயல்பாடுகளை விலைக்கு வாங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 5:50 AM GMT

ஒரு திருப்புமுனை செய்தியாக, சத்திய நாதெள்ளா தலைமையேற்று நடத்திவரும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், சீன பயன்பாடான டிக்டோக்கின் அமெரிக்க செயல்பாடுகளை விலை கொடுத்து கூடிய விரைவில் வாங்கும் எனக் கூறப்படுகிறது என எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் அமெரிக்காவில் டிக்டோக்கைத் தடை செய்து அதற்கான நிர்வாக உத்தரவை வெளியிடலாம் என்ற பரபரப்பில் உண்டாகியிருக்கிறது. இது டிக்டோக்கின் மூல நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தை, அதன் அமெரிக்க செயல்பாடுகளை நல்ல விலைக்கு கொடுக்கலாம் என்ற கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இது சீன பயன்பாடாக இருக்கும் காரணத்தினால் தான் அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளியிட்டு அதை தடை செய்ய அமெரிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

சீனாவின் மிகப் பெரிய கம்பெனிகளில் ஒன்றான பைட் டான்ஸ், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட musical.ly என்ற பயன்பாட்டை 2017ல் விலைக்கு வாங்கி அதை டிக் டோக் உடன் இணைத்தது. அமெரிக்காவில் ஆரம்பத்திலேயே ஒரு கணிசமான பயனர் தளத்தை டிக்டோக் பெற இது உதவியாக இருந்தது.

எனினும் சீனாவின் அமெரிக்க ஊடுருவல் முயற்சிகளும், டிக்டோக் நிறுவனத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடனான ரகசிய உறவுகளும் அமெரிக்க அதிகாரிகளை கவலைக்கு உள்ளாக்கியது. அமெரிக்க குடிமகன்களின் தகவல்களை எளிதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி பெற இந்த பயன்பாடு உதவி செய்யும் என அவர்கள் சந்தேகப்பட்டனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, டிக்டோக்கை சமீபத்தில் தடை செய்தது. டிக்டோக்கின் மற்றொரு பெரிய சந்தையான அமெரிக்காவும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் பரிசீலிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, சீன ஆதிக்கத்தை எதிர்ப்பதில் எந்த அளவு முன்னோடியாக நின்று வழிகாட்டுகிறது என இது காட்டுகிறது.

https://economictimes.indiatimes.com/news/international/business/microsoft-is-said-to-be-in-talks-to-buy-tiktok-in-us/articleshow/77292909.cms

Next Story
கதிர் தொகுப்பு
Trending News