Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக அரசு அபாரம்! பள்ளி சத்துணவுக்கு செலவிடப்படும் தொகை மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கே செலுத்த நடவடிக்கை!

தமிழக அரசு அபாரம்! பள்ளி சத்துணவுக்கு செலவிடப்படும் தொகை மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கே செலுத்த நடவடிக்கை!

தமிழக அரசு அபாரம்! பள்ளி சத்துணவுக்கு செலவிடப்படும் தொகை மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கே செலுத்த நடவடிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 3:16 AM GMT

கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு உணவுப் படி வழங்குவதற்காக வங்கிக்கணக்கு விவரங்களைச் சேகரிக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் எதிரொலியாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு துறைசார்ந்த வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டது தமிழக அரசு. இதையடுத்து மாணவர்களுக்கு உணவுப் படி வழங்கத் அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, எப்போதிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டதோ, அவை மூடப்பட்ட நாளில் இருந்து, மீண்டும் திறக்கப்படும் வரையுள்ள நாட்களைக் கணக்கிட்டு உணவுப் படி வழங்கப்படவுள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதுள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் பெயர், வயது, முகவரி, வங்கிக்கணக்கு எண் ஆகிய விவரங்களைச் சேகரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்ப, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், இப்படியொரு யோசனையை எந்த மாநிலமும் செயல்படுத்தாத நிலையில், தமிழக அரசு முன்னெடுத்திருப்பது, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமையும்.

Next Story