Kathir News
Begin typing your search above and press return to search.

இனி போலி அடையாள அட்டை கொடுத்து 'சிம்' வாங்கினால் ஓர் ஆண்டு சிறை - மத்திய அமைச்சர் அதிரடி

செல்போன் சேவை இணைப்பு பெற போலி அடையாள அட்டை கொடுத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க புதிய தொலைதொடர்பு மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது

இனி போலி அடையாள அட்டை கொடுத்து சிம் வாங்கினால் ஓர் ஆண்டு சிறை - மத்திய அமைச்சர் அதிரடி

KarthigaBy : Karthiga

  |  24 Sep 2022 12:00 PM GMT

செல்போன் தொலைபேசி இணைய சேவைகளை பெறுவதற்கு போலி அடையாள அட்டை கொடுத்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்க புதிய தொலைதொடர்பு மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தி நிறுவனம் ஒன்றுக்களித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :-


137 ஆண்டுகால இந்திய தந்தி சட்டத்துக்கு மாற்றாக புதிய தொலைதொடர்பு மசோதா இன்னும் ஆறு முதல் 10 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் .அரசு இதில் அவசரம் காட்டவில்லை. கலந்தாலோசனை அடிப்படையில் நாங்கள் இறுதி வரைவு மசோதாவை தயாரிப்போம். நாடாளுமன்ற செயல்முறைகள் குழுவுக்கு செல்லும். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகும். இந்த மசோதா ஒப்புதல் பெற்று சட்டமான பின்னர் அழைப்பு மற்றும் செய்தி பரிமாற்ற சேவை வழங்கும் வாட்ஸ் அப்,சூம்,கூகுள் டியோ போன்றவற்றுக்கு உரிமைகள் தேவைப்படும் இந்த மசோதாவின் படி எல்லா இணையதள அழைப்பு மற்றும் தகவல் சேவை செயலிகளும் தொலைதொடர்பு உரிமை வரையறைக்குள் வந்துவிட்டால் விதிமுறைக்கு இணங்க வேண்டியது வரும். இந்த மசோதாவின் அடிப்படையில் சிந்தனை, உபயோகிப்பாளர்கள் பாதுகாப்புதான் . ஒவ்வொரு உபயோகிப்பாளரும் யார் அழைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிற உரிமையை கொண்டிருக்கிறார்கள். மாறுபட்ட தளங்களில் இருந்து அழைப்புகள் வருகிற போது ஒவ்வொருதளமும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறையின் கீழ் வர வேண்டும் .


இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்த சிந்தனை செயல்முறை உள்ளது. தொழில்நுட்பம் எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குரல் அழைப்பு, தரவ அழைப்பு என்ற வேறுபாடு மறைந்து விட்டது. கே.ஒய்.சி எனும் வாடிக்கையாளர் பற்றிய சுய விவரங்கள் இணையவடி குற்றங்களை கட்டுப்படுத்தவும் உதவும். தொலைத்தொடர்பு சேவையை பெறுவதற்கு போலி அடையாள அட்டை தந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கவும் மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News