Kathir News
Begin typing your search above and press return to search.

தன்னை வணங்கும் அனைத்து இடங்களிலும் அதிசயம் நிகழ்த்தும் சாய்பாபா.!

தன்னை வணங்கும் அனைத்து இடங்களிலும் அதிசயம் நிகழ்த்தும் சாய்பாபா.!

தன்னை வணங்கும் அனைத்து இடங்களிலும் அதிசயம் நிகழ்த்தும் சாய்பாபா.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 April 2020 7:56 AM IST

வட சென்னை, வண்ணாரப்பேட்டையில் காமராஜர் சாலையில் உள்ள குடியிருப்பொன்றில் அமைந்துள்ளது வட சென்னை ஷீரடி சாய்பாபா கோயில் . தமிழகத்திலேயே ஷீரடிக்கு நிகரான அற்புதத்தை கொண்டது இந்த ஆலயம் . இந்த ஆலயத்தில் அமைந்துள்ள பாபாவின் சிலையில் உள்ள கண்கள் மிக தத்ரூபமாக நம்மை பார்த்து உருட்டி விழிப்பது போல் இருக்கும் . நிஜமாகவே பாபா நம்மை பார்பது போன்ற அனுபவத்தை இந்த ஆலயத்தில் உள்ள பாபா நமக்கு தருகிறார் .

தினமும் இந்த ஆலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த அனுபவத்தை பெற்று மெய் சிலிர்க்கிறார்கள் . நாம் பக்கவாட்டில் சென் று நின்றாலும் கரு விழிகளை உருட்டி நம்மை பார்பது போலிருக்கிறது. ஆனால் இந்த சிலையை உருவாக்கிய போது இது போல் பிரத்தியேகமாக ஏதும் உருவாக்க பட வில்லை. ஆரம்பத்தில் இயல்பாக இருந்த இந்த சிலையின் கண்கள் தற்போது பிரகாசமாக உயிரோட்டமாக இருப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள் . இதனால் அந்த ஆலயத்திற்கு மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பகுதியில் குடியிருந்த பக்தர் ஒருவரின் கனவில் பாபா தோன்றி தன்னை அருகில் உள்ள இடத்தில் வைத்து வழிபட சொன்னதால் அங்கு சிறிதாக ஓர் ஓலை குடிசையில் சாய் பாபா சிலையை வைத்து வழிபட்டு வந்தார். பிறகு நாளாக ஆக மக்கள் கூட்டம் அதிகமானதால் அங்கு ஒரு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இப்போது அழகான கோயிலாக உருவாக்கபட்டுள்ளது. இங்கு ஐயப்பன் சன்னிதி தட்ஷணா மூர்த்தி சன்னிதி மற்றும் கிருஷ்ணர் சன்னதி இருப்பது சிறப்பு . ஷீரடியில் உள்ளது போலவே சமாதி மந்திர் குருஸ்தான் துவாரகா மாயி சாவடி என்று அமைக்க பட்டிருக்கின்றன .

இங்கு இயற்கையாகவே சன்னிதிக்குள் வேப்பமரம் அமைத்துள்ளது. துவாரகாமயி உருவாக்கும் போது ஒரு அதிசயம் நடந்தது. துவாரகா மயி கட்டிடம் எழும்பி கொண்டிருந்த போது திடீரென்று அச்சு அசலாக பாபாவின் உருவம் தெரிந்தது . அங்கிருந்த பக்தர் ஒருவரின் சுண்களுக்கு இது தெரிந்து எல்லோருக்கும் தகவல் தெரிவித்தார் . பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசித்து விட்டு சென்றனர் . பாபா முகம் தெரிந்த இடம் இன்று கண்ணாடி போட்டு பாதுகாக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு எல்லோரும் வழிபடுவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது . இந்த அற்புதம் இதற்கு முன்னர் ஷீரடியிலேயே நடந்துள்ளது . இங்கு

ஷீரடி மட்டுமல்லாமல் தன்னை நினைத்து வழிபடும் ஸ்தலம் எந்த இடம் ஆனாலும் தன் அருளையும், ஆசியையும் அதிசத்தையும் நிகழ்த்துகிறார். தன்னை நினைத்து துதிக்கும் மக்கள் எங்கிருப்பினும் ஓடி வந்து அருள் புரிவதே இவரின் கருணை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News