கொரோனா ஆய்வுக்கு சென்ற அரசு ஊழியர்களை குடியுரிமை கணக்கெடுக்க வந்ததாக விரட்டியடித்த இஸ்லாமிய மக்கள் - களமிறங்கிய காவல்துறை!
கொரோனா ஆய்வுக்கு சென்ற அரசு ஊழியர்களை குடியுரிமை கணக்கெடுக்க வந்ததாக விரட்டியடித்த இஸ்லாமிய மக்கள் - களமிறங்கிய காவல்துறை!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரோனா ஆய்வுக்குச் சென்றவர்களை குடியுரிமை கணக்கெடுப்புக்கு வந்ததாகக் கூறி சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து தப்லீக்ஜமாத் மாநாட்டிற்காக டெல்லிக்கு சென்று வந்தவர்கள் 8 பேர் அவர்கள் யார் என்று தெரியாத நிலையில் சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள், வருவாய் துறையினர் என 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து நகரம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நகரம் முழுதும் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் அவர்கள் குடியுரிமை கணக்கெடுப்புக்கு வருவதாகவும் ஒத்துழைக்க வேண்டாமென்றும் சமூக வலைதளம் மூலம் ஆடியோ பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதனை அடுத்து கொரோனா ஆய்வுக்கு சென்றவர்களின் ஐ.டி. கார்டுகளை பறித்து சிறைப்பிடித்த சிலர், ஆய்வுச் சீட்டுகளையும் கிழித்தெறிந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அரசு ஊழியர்கள் கொண்டு சென்ற ஆவணங்களை குடியுரிமை கணக்கெடுப்பு தான் என்று வம்படியாக சண்டையிட்டு கிழித்து எறிந்து அரசு ஊழியர்களை விரட்டி அடித்தனர். சிறைப்பிடிக்கப்பட்டவர்களை மீட்ட காவல்துறையினர் , இருவரை கைது செய்து தப்பி ஓடிய பலரை தேடி வருகின்றனர்.