Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி தான் தமிழகத்தை தேர்வு செய்தார்! தமிழகத்திற்கு மகுடம் சூட்டிய பிரதமர்.!

மோடி தான் தமிழகத்தை தேர்வு செய்தார்! தமிழகத்திற்கு மகுடம் சூட்டிய பிரதமர்.!

மோடி தான் தமிழகத்தை தேர்வு செய்தார்! தமிழகத்திற்கு மகுடம் சூட்டிய பிரதமர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Oct 2019 3:33 AM GMT


பிரதமர் நரேந்திர மோடி சற்று வித்தியாசமானவர். எதையும் அதிரடியாக செய்பவர். அரசு சந்திப்புகள் முக்கியமான நிகழ்ச்சிகளை தலைநகரில் தான் வைப்பார்கள். இதனால் டெல்லியை பற்றி மட்டுமே வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியும். இதை மாற்றி அமைத்தவர் பிரதமர் மோடி. இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் சுற்றுலாத்தலங்களிலும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள், அயல் நாட்டு தலைவர்களை சந்திப்பதை வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி!


இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் சந்திப்பு, தமிழ்நாட்டில் நடப்பதை உலக நாடுகளின் பார்வை தமிழகத்தின் மீது விழுந்துள்ளது. எதற்காக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது யார் தேர்வு செய்தார்கள் என பலரும் கேள்விகள் எழுப்பி வந்த நிலையில் இதற்கு காரணம் பிரதம மோடி தான் என விடை தெரிந்துள்ளது. வளரும் இருபெரும் நாடுகளின் சந்திப்பு என்பதாலும் பொருளாதார வளர்ச்சியில் போட்டி நாடுகளின் சந்திப்பு சில வாரங்களுக்கு முன் மோடி அமெரிக்காவில் டிரம்புடன் சந்திப்பு இன்று அமெரிக்காவின் எதிரி நாடக கருதப்படும் சீன அதிபரை இந்தியா வழைத்து சந்திப்பு என உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது கண் கொத்தி பாம்பாக உற்று நோக்குகின்றன, என்பது நிதர்சனம்.


இதில் முக்கியமானது உலக நாடுகளை இந்தியா மீது மட்டுமல்லால் தமிழகம் மீது பட்டுள்ளது, ஏனென்றால் சீனாவிற்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு என்பதை உலகம் தற்போது ஆராய்ந்தது வருகிறது.


இந்தியாவில் எத்தனையோ நகரங்கள், பாரம்பரிய பெருமைமிக்க இடங்கள் என பல இருந்தும், தமிழகத்தின் வாங்க கடல் சந்திப்பின் மாமல்லபுரம், ஏன் இந்த சந்திப்புக்கு தேர்வு செய்யப்பட்டது, என்பதற்கு வரலாறு தான் காரணம் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.


பிரதமர் மோடி, சீன இந்திய தொடர்புகளை பற்றி ஆராயும் போது மாமல்லபுரத்தின் பெருமையை பற்றி அறிந்துள்ளார் அவரது சொந்த தொகுதியான வாரணாசி அல்லது அவரது சொந்த மாநிலம் குஜராத் மற்றும் சில நகரங்களில் இந்த சந்திப்பை வைத்து கொள்ளலாம் என அதிகாரிகள் அவருக்கு பரிந்துரை செய்துள்ளனர் அனால் நமது பாரத பிரதமர் மாமல்லபுரத்தையே அவர் தேர்வு செய்தார்.


கடந்த ஏழாம் எட்டாம் நுாற்றாண்டுகளில் பல்லவர்கள் ஆட்சி செய்த காலத்தில் காலத்து கடற்கரை நகரமான மாமல்லபுரத்துக்கும் சீனாவுவுக்கும் வணிக வகையில் தொடர்புகள் இருந்துள்ளது. முன்னோர்கள் காலத்தில் சீனாவுடன் வணிக தொடர்பு வைத்திருந்த நகரங்களில் பெயர் பெற்றது மாமல்லபுரம் அண்டைநாடுகளின் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்துக்கு நுழைவுவாயிலாக இருந்தது குறிப்பிட தக்கது.


மாமல்லபுரத்திற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள பண்டைய கால நினைவுகளை சீனாவிடம் கூறி வரலாற்று தொடர்புகளை கருத்தில் நினைவூட்டுவோம் என சீனாவிடம் கூறியதால் சீனவும் மாமல்லபுரத்துக்கு ஒப்புதல் அளித்தது. .இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியால், மாமல்லபுரமும் புதுப்பொலிவு பெற்று, உலக கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News