Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளுக்கு ரூ.2000 செலுத்திய பிரதமர், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ரூ.500 - பணத்தை எடுக்க இண்டூர் வங்கி முன்பாக காத்திருக்கும் பெண்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 April 2020 6:49 AM GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்தார்.

இந்த உத்தரவின்போது விவசாயிகள் எந்தவித பாதிப்பும் அடையாமல் இருப்பதற்காக மத்திய அரசு ரூ.2000 வீதம் மூன்று மாதங்களுக்கு ரூ.6000 அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் விவசாயிளுக்கு வங்கி மூலமாக ரூ.2000, 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ரூ.500 செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், இண்டூர் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் பணம் எடுப்பதற்காக ஏராளமான பெண்கள் வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து பெண்கள், ஆண்கள் வரிசையாக நின்று பணத்தை வங்கியில் பெற்று சென்றனர்.

இது பற்றி விவசாயிகள் கூறியதாவது: பிரதமர் நரேந்திரமோடி அளித்த ரூ.2000 தற்போது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த பணத்தை வைத்து எங்களின் குடும்பத்தினர் நிம்மதியாக சாப்பிடுவார்கள் என்று கூறினார்.

Next Story