Kathir News
Begin typing your search above and press return to search.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் : அனைத்து தலைவர்களுக்கும் அரசு அழைப்பு! #PulwamaAttack

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Feb 2019 3:05 AM GMT

காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில், நேற்று முன்தினம், CRPF எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது, பாகிஸ்தானை சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் பயங்கரவாதி, வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனத்தை மோதச் செய்ததில் CRPF வாகனத்தில் இருந்த, 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்; பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி அரசு முதன் முதலாக இன்று அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்ட உள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், பதன்கோட், உரி, நக்ரோட்டா தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக மத்திய அரசு கூட்ட உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்கட்சிகளின் ஒருமித்த ஆதரவை பெற வேண்டி நடக்க உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்போம் என காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் முன்னர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News