தமிழரின் பாரம்பரிய உடையில் குத்துவிளக்கேற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி.!
தமிழரின் பாரம்பரிய உடையில் குத்துவிளக்கேற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதன் மூலம் மக்கள் வெளியில் வருவது முற்றிலும் தடை பட்டது.
இதனால் பல கோடி மக்கள் பாதுகாப்பாக அவர்அவர் வீடுகளிலேயே தங்களை தனிமை படுத்திக்கொண்டனர்.
இதனை போற்றும் விதமாக 5ம் தேதி இரவு 9 மணியளவில் பொதுமக்கள் தங்களின் ஒற்றுமை உணர்வை இந்த தேசத்திற்கு காட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அவரின் வேண்டுகோளை ஏற்று 130 கோடி மக்களும் ஒரே நேரத்தில் அகள் விளக்கு, மெழுகுவர்த்தி, செல்போன் லைட் போன்றவைகளை ஒளிர செய்தனர்.
இந்நிலையில், பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் டெல்லியில் உள்ள அவரின் வீட்டில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து குத்துவிளக்கேற்றினார்.
இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழர்களின் அடையாளத்தை ஒட்டு மொத்த உலகிற்கு எடுத்துக்காட்டுவதில் பிரதமர் மோடி அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பலர் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.