Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் திங்கள்கிழமை பள்ளி - கல்லூரிகள் திறப்பு! இயல்பு நிலை திரும்புகிறது!!

காஷ்மீரில் திங்கள்கிழமை பள்ளி - கல்லூரிகள் திறப்பு! இயல்பு நிலை திரும்புகிறது!!

காஷ்மீரில் திங்கள்கிழமை பள்ளி - கல்லூரிகள் திறப்பு! இயல்பு நிலை திரும்புகிறது!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Aug 2019 10:45 AM GMT

இந்திய அரசியல் சட்டம் 370-வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதைப்போல அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜம்மு, லடாக், லே உள்ளிட்ட பகுதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன.

ஆனால் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீடித்ததால் பள்ளி - கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன.
இந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திங்கள் கிழமை (ஆகஸ்ட்-19) முதல் செயல்பட தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று முதல் வழக்கம்போல இயங்கும் என்று காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் அறிவித்துள்ளார்.
இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலும் படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.
http://twitter.com/ANI/status/1162256661236482048
Next Story