திரௌபதி திரைப்படத்தை குடும்பத்தோடு அதிலும் பெண் பிள்ளைகளோடு பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம் - H ராஜா
திரௌபதி திரைப்படத்தை குடும்பத்தோடு அதிலும் பெண் பிள்ளைகளோடு பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம் - H ராஜா

திரௌபதி படத்தின் பிரத்தியேக காட்சியை சென்னை பிரசாத் லேப்பில் திரையிடப்பட்டது, இந்தப் படத்தின் சிறப்பு காட்சியை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா பார்த்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா. திரௌபதி திரைப்படத்தை குடும்பத்தோடு அதிலும் பெண் பிள்ளைகளோடு பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம் என தெரிவித்தார்.
ஏனென்று சொன்னால் எத்தனை பெண் குழந்தைகள் ஏமாற்றப்படுகிறார்கள்நாடகக் காதலால்? அந்தக் குழந்தைகள் குழந்தையாக இருக்கும் போது! ஆளும் போதெல்லாம் மடியிலும், தொழிலும், போட்டு வளர்க்கக்கூடிய பெற்றோரிடம் இருந்து, அந்தக் குழந்தைகள் பாலுணர்வு வக்கிரத்தால் ஈர்க்கப்பட்டு சமூக சீர்கேடுகள் நிறைந்திருக்கும் சூழ்நிலையில் ஒரு சமூகத்தை சீர்படுத்தக் கூடிய படமாக திரௌபதி திரைப்படத்தைப் பார்ப்பதாக கூறினார்,இந்த படத்தின் டிரைலர் வெளியிடும் போது சொன்ன புகார்கள்அடிப்படையற்றது என்று இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தெரிகிறது.
ஒரு ஒரு பெண் குழந்தையும் திருப்தியாக வாழ வேண்டும் எனவும் சிலபேருக்கு திரௌபதி என்ற பெயர் கேட்டாலே பயம் வரலாம் எனவும் திரௌபதி என்ற பெயர் இந்தப் படத்திற்கு வைத்ததாக மோகன் அவர்களின் குழுவினருக்கு எனது பாராட்டுகள் என கூறிய அவர் மேலும் ஒரு நல்ல படத்தை பார்த்த மகிழ்ச்சி இன்று ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.