மருத்துவத்துறையினருக்கு கைதட்டி நன்றி தெரிவித்த ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
நேற்று நடந்த மக்கள் ஊரடங்கின் ஒரு அங்கமாக, மாலை 5 மணிக்கு கொரோனாவை எதிர்த்து போராடும் பல துறை பணியாளர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்தார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று ஒரு நாள் மக்கள் ஊரடங்கு நடத்த வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கையை ஒட்டு மொத்த இந்தியாவே நிறைவேற்றியது. இதனை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், ராணுவம், விமான நிலையம், பத்திரிக்கை துறை, அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணியாளர்கள் மற்றும் பிற துறைப்பணியாளர்களுக்கு நேற்று மாலை 5 மணிக்கு இந்தியர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர். நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், மாநில முதல்வர்கள் துவங்கி குடிசை வாழ் மக்கள் வரை கைதட்டியும், சங்கு நாதம் எழுப்பியும், கரகோஷம் எழுப்பியும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
அந்த வகையில், மஹாரண்யம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மற்றும் அன்பர்கள் சிலர் நேற்று மாலை 5 மணிக்கு கைதட்டி நன்றி தெரிவித்தனர்.
சுகாராதாரத் துறையினர், காவல்துறையினர், ராணுவத்தினர், ஏர் இந்தியா நிறுவனத்தினர் மற்றும் மத்திய, மாநில அரசிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்கள் மற்றும் அவருடனிருந்த சில அன்பர்கள் கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர்.