Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவால் இசை நிகழ்ச்சிகள் தள்ளிவைப்பு - ஏ.ஆர்.ரஹ்மான்!

கொரோனாவால் இசை நிகழ்ச்சிகள் தள்ளிவைப்பு - ஏ.ஆர்.ரஹ்மான்!

கொரோனாவால் இசை நிகழ்ச்சிகள் தள்ளிவைப்பு - ஏ.ஆர்.ரஹ்மான்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 March 2020 12:23 PM IST

தனது இசை மூலம் உலகெங்கிலும் ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசை நிகழ்ச்சி உலகில் எந்த மூலையில் நடைபெற்றாலும், அரங்கு நிறைந்து டிக்கட்டுகள் கிடைப்பதே கடினமாக இருக்கும்.

இந்நிலையில் இந்த ஆண்டு வட அமெரிக்காவிற்க்கு சுற்று பயனம் செல்ல திட்டமிட்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் அங்கு இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுருந்தார். தற்போது கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிப்படைந்திருக்க, குறிப்பாக அமெரிக்கா பெரும் பாதிப்பை சந்தித்திருப்பதால் தனது இசை நிகழ்ச்சியை தள்ளி வைப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் "என்னுடைய இசையை உலகம் முழுவதும் உள்ள என் ரசிகர்களிடம் சேர்ப்பதை விட முக்கியமான விஷயம் வேறு எதுவும் எனக்கு இல்லை. துரதிர்ஷ்டவசமாக, இது நாம் நம் குடும்பத்தோடு வீட்டில் இருக்க வேண்டிய தருணம். எனவே உங்கள், என் ரசிகர்கள், என் குடும்பம் மற்றும் என் இசைக்குழுவினர் ஆகியோரது நலன் கருதி மே மற்றும் ஜூன் வட அமெரிக்கச் சுற்றுலாவை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கிறேன். அந்த தருணத்தில் நாம் மீண்டும் ஒன்றிணைந்து சமூகத்துடன் இசையைப் பகிர்ந்து கொள்ளலாம். நிச்சயமாக உங்களிடம் அது குறித்து தெரிவிப்பேன். அனைவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News