Begin typing your search above and press return to search.
இனி தமிழ்நாட்டில் தமிழுக்கே முதலிடம் - கடைகள், நிறுவனங்களுக்கு அரசு பிறப்பித்த உத்தரவின் பின்னணி!
இனி தமிழ்நாட்டில் தமிழுக்கே முதலிடம் - கடைகள், நிறுவனங்களுக்கு அரசு பிறப்பித்த உத்தரவின் பின்னணி!

By :
கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துகள் முதன்மையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளர் நலத்துறை ஆணையர் நந்தகோபால் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற மொழிகள் பெயர் பலகையில் பயன்படுத்தப்பட வேண்டிய நிலை வந்தால் தமிழுக்கு அடுத்து ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், மற்ற பிற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனை பின்பற்றாது கடைகள், நிறுவனங்களில் பெயர் பலகை வைத்தல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
Next Story