அதர்வாவுக்கு வில்லனான கதாநாயகன்! இதோ புகைப்படம்!
அதர்வாவுக்கு வில்லனான கதாநாயகன்! இதோ புகைப்படம்!

'குருதி ஆட்டம்', 'தள்ளி போகாதே', 'ஒத்தைக்கு ஒத்த' படங்களில் நடித்து வரும் அதர்வா அடுத்து ரவீந்திர மாதவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் நாயகியாக லாவன்யா திரிபாதி நடிக்கிறார். தற்போது இப்படத்தின் வில்லனாக நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து இயக்குனர் ரவீந்திர மாதவ் "வில்லன் கதாபாத்திரத்துக்கு ஒருவரைத் தேடுவதென்பது நீண்ட பயணமாக இருந்தது. இறுதியாக நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்பு கொண்ட அவர் நடிப்பிலும் சிறந்து விளங்குபவராக இருக்கிறார். எந்த ஒரு பாத்திரம் ஆனாலும் எளிதில் அந்தப் பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது.
இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரம் என்பது உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, மகா புத்திசாலித்தனமாகச் செயல்படுபவர். இரண்டிலுமே "நந்தா" தன்னை நிரூபித்தவர். கரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது" என கூறியுள்ளார்.