ஸ்பேனர் புடிச்சவன்லாம் மெக்கானிக் ஆயிட முடியுமா.? - இணையத்தில் கலாய்க்கும் இளைஞர்கள் !
ஸ்பேனர் புடிச்சவன்லாம் மெக்கானிக் ஆயிட முடியுமா.? - இணையத்தில் கலாய்க்கும் இளைஞர்கள் !

நாகப்பட்டினத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலமாக சென்று கொண்டிருந்த போது, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே சித்தமல்லியில் விவசாயிகள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை கவனித்த முதலமைச்சர் காரை விட்டு இறங்கி வயல் வெளிக்கு சென்றார்.
விவசாயிகளுடன் நாற்று எவ்வளவு ஆழத்தில் நட வேண்டும் என்பன பற்றி கலந்துரையாடினார். இதனையடுத்து அவர் ஒரு கத்தை நாற்றை எடுத்து வயலில் நட்டு மகிழ்ந்தார்.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் சேற்றில் இறங்குவது போன்ற படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அவர் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் நமக்கு நாமே பயணம் என்று ஆரம்பித்து டீ கடை முதல் கரும்பு தோட்டம் வரை சென்று வந்து விட்டார். அதே போன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேற்றில் இறங்கி நாற்று நற்றார். இந்த இரண்டு செய்திகளும் இணையம் மற்றும் இல்லாமல் பல தொலைக்காட்சிகளில் வைரலாக பேசப்பட்டது என்றே சொல்லலாம்.
தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சேற்றில் இறங்கும் படத்தை அவரது தொண்டர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு விவசாயத்தை பற்றி நன்கு தெரியும்.
ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விவசாயத்தை பற்றி எதுவும் அறியாதவர் என்றே சொல்லலாம்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விட்டார் என்றால், அதனை காப்பி அடித்து அடுத்து அரை மணி நேரத்தில் தானும் ஒரு அறிக்கையை வெளியிடுவார் ஸ்டாலின்.
இதனை ஊடகங்களும் ஸ்டாலின்தான் அறிக்கை விட்டார் என்று பெரிய செய்தியாக வெளியிடுவார்கள்.
அதே போன்று பல்வேறு அறிக்கை மட்டும் இல்லை, நிஜ வாழ்க்கையிலும் காப்பி அடிப்பதில் ஸ்டாலினுக்கு கை வந்த கலை என்றே சொல்லலாம்.
நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில் படம் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. கவுண்டமணி ஒரு மெக்கானிக்காக நடித்திருப்பார்.
அப்போது செந்தில், கவுண்டமணியிடம் ஒரு டயலாக் சொல்வார். ஸ்பேனர் பிடித்தவன் எல்லாம் மெக்கானிக் என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க. இந்த காமெடிதான் ஸ்டாலினையும் கூறலாம்.
விவசாயத்தை பற்றி தெரியாமல் கட்சி நிர்வாகிகள் சொல்வதால் தானும் சேற்றில் இறங்கி விட்டார் என்றே சொல்லலாம். இதனை இளைஞர்கள் பலர் இணையத்தில் மீம்ஸ் வடிவத்தில் பதிவு செய்து வருகின்றனர்.