Kathir News
Begin typing your search above and press return to search.

போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு 1905 சதுர அடி பரப்புள்ள வீடுகள் - இதுவரை 47000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன! பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Feb 2019 10:41 AM GMT

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. மொத்தம் நிர்ணயிக்கப்பட்ட 63000 வீடுகளில் 47000 வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டு பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், ஹட்டன் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.13.5 கோடி செலவில் கட்டப்பட்ட 155 புதிய வீடுகள் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உள் கட்டமைப்புத் துறை மந்திரி பழனி திகம்பரம் முன்னிலையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் குடியிருப்பை திறந்து வைத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்தனர்.

ஒவ்வொரு வீடும் 7 பெர்ச் (1905 சதுர அடி) நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மற்ற கட்டுமான வசதிகளுடன் ஒப்பிடும்போது, இந்த கட்டிடங்கள் பசுமை கிராமங்கள் எனும் அரசின் திட்டத்தின் கீழ் கூடுதல் வசதியுடன் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது.

புதிய வீடுகளின் உரிமையாளர்களுக்கு இந்திய தூதர் தரஞ்சித் சிங், வாழ்த்துக்கள் கூறினார். மேலும் இலங்கைக்கு 5000 கோடி ரூபாய் செலவில் இந்தியா வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், மொத்தம் நிர்ணயிக்கப்பட்ட 63000 வீடுகளில் 47000 வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேசுகையில், ‘இந்த சிறந்த திட்டத்தினை செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிற்கு இலங்கையின் முன்னேற்றம் மீதான முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் விதமாக இச்செயல் இருக்கிறது. இதேபோன்று இந்தியா- இலங்கை மக்களுக்கு இடையேயான நட்புறவு அமைதியாகவும், வளமாகவும் தொடர வேண்டும்’ என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News