Kathir News
Begin typing your search above and press return to search.

வேப்பிலை மற்றும் மஞ்சளை அரைத்து பூசிக்கொண்டு பொதுமக்களிடையே நூதன விழிப்புணர்வு..

வேப்பிலை மற்றும் மஞ்சளை அரைத்து பூசிக்கொண்டு பொதுமக்களிடையே நூதன விழிப்புணர்வு..

வேப்பிலை மற்றும் மஞ்சளை அரைத்து பூசிக்கொண்டு பொதுமக்களிடையே நூதன விழிப்புணர்வு..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 April 2020 3:50 AM GMT

கோரோனா வைரஸ் குறித்து புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் உடல் முழுவதும் வேப்பிலை மற்றும் மஞ்சளை அரைத்து பூசிக்கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தர்ராஜன் என்பவர் தனது உடல் முழுவதுமாக வேப்பிலை மற்றும் மஞ்சளை அரைத்து தலையில் இருந்து கால் வரை பூசிக்கொண்டு கொரோனா நோய் தொற்று பரவமால் பாதுகாத்துக் கொள்வது குறித்து பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரிடையே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை உடம்பில் மாட்டிக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் மேலும்

மேலும் சாலையில் வந்த பொதுமக்களை நிறுத்தி கொரனா நோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மற்றும் அரசாங்க தடை உத்தரவை மீறி வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

Next Story