தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகள் நேரடியாக நிவாரணம் வழங்க வேண்டாம் - தமிழக அரசு அதிரடி
தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகள் நேரடியாக நிவாரணம் வழங்க வேண்டாம் - தமிழக அரசு அதிரடி

கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் நிவாரணம் வழங்குகிறோம் என்று கூறி பல்வேறு அமைப்புகள் உணவு தயாரித்து நேரடியாக வழங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிபதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.
தமிழக அரசு நோய் தாக்கத்தின் அச்சம் காரணமாக நோய் தாக்கம் சமூக பரவலாக மாறாமல் இருக்கவும் பொது தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அரசு நிர்வாகத்திடம் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்த நேரத்தில் அரசியல் நடத்த வேண்டும் என்று கூடவா தெரியாது? திமுக கூட்டணிக்கு என்பதை உணராமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பது சரியா? அரசின் உத்தரவு மக்களின் உயிர் பாதுகாப்பு என்பதை உணராமல் அரசியல் இந்த நேரத்தில் தேவையா?
வைரஸ்க்கு திமுக, அதிமுக என்று பார்ப்பதில்லை எனவே மக்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் அரசியல் நடத்தமுடியும் என்பதை ஏன் உணர மறுப்பது நியாயமா? கொடி பிடிக்கவும் கோஷம் தொண்டர்கள் ஆரோக்கியம் முக்கியம் என்பதை திமுக கூட்டணி கட்சிகள் உணர்ந்தாள் சரி.