Kathir News
Begin typing your search above and press return to search.

பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் என்ஐஏக்கு கூடுதல் அதிகாரம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது !!

பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் என்ஐஏக்கு கூடுதல் அதிகாரம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது !!

பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் என்ஐஏக்கு கூடுதல் அதிகாரம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2019 1:15 PM GMT



நாட்டில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் தாக்குதலுக்கு திட்டமிடும் பயங்கரவாதிகளை பற்றிய உளவுத்தகவல்களை கண்காணித்து அவர்களை கைது செய்வது ஆகிய பணிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


இந்த முகமைக்கு அதிகமான அதிகாரங்களை அளிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது மக்களவையில் கடும் விவாதம் நடந்தது.


இதற்கு பதிலளித்துப் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-


இந்த மசோதா நாட்டின் நலன் தொடர்பானது. நாட்டில் வளர்ந்து வரும் தேச விரோத பயங்கரவாதிகளை கட்டுப்டுத்த தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரம் சீர்திருத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. நேற்று கூட தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகிகளில் ஒருவரான செய்யது தாக்கீர் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு நான் உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன். இது போன்ற பயங்கரவாத செயல்கள் வேரோடு களையப்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.


சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது. பயங்கரவாதத்தில் எந்த பயங்கரவாதி எந்த மதம் என்பது முக்கியமல்ல. யாரையும் குறி வைத்தோ, யாரையும் காயப்படுத்தவோ அரசுக்கு நோக்கமல்ல.


இவ்வாறு அமித்ஷா பேசினார்.


விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.


குற்றம்சாட்டப்படும் நபரை கைது செய்யும் அதிகாரம் மற்றும் சிறப்பு கோர்ட் அமைப்பது, மாநில அரசின் குறுக்கீடுகளை அகற்றுதல் உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் என்ஐஏவுக்கு வழங்கப்பட்டுள்ளன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News