Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் தீவிரவாத போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வங்கி மேலாளர் கைது.! #NIA #Terrorism #NarcoTerror #Kashmir

காஷ்மீரில் தீவிரவாத போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வங்கி மேலாளர் கைது.! #NIA #Terrorism #NarcoTerror #Kashmir

காஷ்மீரில் தீவிரவாத போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வங்கி மேலாளர் கைது.! #NIA #Terrorism #NarcoTerror #Kashmir

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 July 2020 12:07 PM GMT

போதைப்பொருள் கடத்தலின் மூலம் தீவிரவாத செயல்களுக்கு உதவி வந்த அகமது வானி என்ற நபரைக் கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் செய்தித் தொடர்பாளர் தகவல் அளித்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் 11 அன்று பாரமுல்லாவில் இருந்து ஹந்த்வாரா சென்று கொண்டு இருந்த பதிவு எண் இல்லாத ஒரு வாகனத்தை காவல்துறையினர் சோதனையிட்ட போது ₹ 20.1 லட்சம் ரொக்க பணமும் 6.2கிலோ ஹெராயினும் கைப்பற்றப்பட்டன. வாகனத்தை ஓட்டி வந்த அப்துல் மொமீன் பீர் என்ற நபர்‌ கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்ததன் விளைவாக இப்திகார் அன்ட்ராபி மற்றும் பீர் இஸ்லாம்-உல்-ஹக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாரமுல்லா மாவட்ட கூட்டுறவு வங்கிக் கிளையில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த அகமது வானி, போதைப் பொருள் கடத்தல் கும்பலைப் பிடித்த பின் கைது செய்யப்படும் நான்காவது குற்றவாளி ஆவார்.

இந்த கும்பலிடம் இருந்து இது வரை 21கிலோ அளவிலான ஹெராயினும் ₹ 1.35 கோடி பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருளை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி காஷ்மீருக்குள் கடத்தி அதில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் செயல்பாட்டுகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஹந்த்வாரா மாவட்டத்தின் மரட்கம் என்ற ஊரில் வசித்து வந்த அவரது வீட்டிலிருந்து 3.2 கிலோ ஹெராயினும் ₹ 30.30 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டன. ஸ்ரீநகரில் ஒளிந்திருந்த அவரை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 12 நாள் காவலில் எடுத்துள்ளனர்.

Next Story