Kathir News
Begin typing your search above and press return to search.

விசாகப்பட்டினத்தில் கிரேன் சரிந்து கோர விபத்து - 9 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி!

விசாகப்பட்டினத்தில் கிரேன் சரிந்து கோர விபத்து - 9 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி!

விசாகப்பட்டினத்தில் கிரேன் சரிந்து கோர விபத்து - 9 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 10:49 AM GMT

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் பகுதியில் கிரேன் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்து, சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே தளத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது தெரியவருகிறது.

போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீனா கூறுகையில், ஆரம்ப விசாரணையின்படி, கிரேன் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிரேன் புதிதாக அமைக்கப்பட்ட ஒன்று என்றும், காலை 11 மணி முதல் நண்பகல் வரை சோதனை ஓட்டங்களுக்கு உட்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து மல்காபுரம் போலீசார் விசாரித்து வருவதாகவும், விசாரணை முடிந்ததும் தொடர்புடைய வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் திரு மீனா தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.சீனிவாச ராவ், மாவட்ட ஆட்சியரிடம் பேசியதை தொடர்ந்து, அதிகாரிகள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில், பல குடும்பங்கள் தங்கள் உறவினர்கள் இருக்கும் இடத்தைத் தேடி நிறுவனத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

1961 ஆம் ஆண்டில், இந்த கப்பல் தளம் தேசியமயமாக்கப்பட்டு இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (எச்.எஸ்.எல்) என மறுபெயரிடப்பட்டது. 2010 ஆம் ஆண்டில், எச்.எஸ்.எல் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News