பாராளுமன்றத்தில் காஷ்மீர் விவாதத்தில் திருமாவளவனை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன்! பெட்டிப்பாம்பாய் அடங்கியதா சிறுத்தை?
பாராளுமன்றத்தில் காஷ்மீர் விவாதத்தில் திருமாவளவனை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன்! பெட்டிப்பாம்பாய் அடங்கியதா சிறுத்தை?

ஜம்மு காஷ்மீரை 3 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததன் மூலம் அம்மாநில மக்கள் வஞ்சிக்கப்பட்டு விட்டனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று பாராளுமன்றத்தில் பேசினார்.
மக்களவையில் இது குறித்து பேசிய அவர், "ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்பட அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும். யூனியன் பிரதேசங்களாக பிரித்ததன் மூலம் அம்மாநில மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது" என்றார்.
வீடியோ: திருமாவளவனை பாராளுமன்றத்தில் தமிழிலேயே வெளுத்து வாங்கிய நிர்மலா சீதாராமன்! நடந்தது என்ன? #NirmalaSitharaman #Thirumavalavan #Parliament @nsitharaman pic.twitter.com/WjKX56M1yx
— Kathir News (@KathirNews) March 19, 2020
இதற்கு இன்று மக்களவையில் இன்று பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தற்போது தலித் மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் திருமாவளவன், காஷ்மீரில் உள்ள ஹரிஜன மக்கள் பாதித்த போது ஏன் அவர்களுக்காக பேசவில்லை? அப்போ
து எங்கே சென்றீர்கள்" என்று காரசாரமாக பேசி திருமாவளவனின் போலிதனத்தை மேற்கோள்காட்டி வறுத்தெடுத்தார்.