அசாமில் கடந்த 7 நாட்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.!
அசாமில் கடந்த 7 நாட்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.!

அசாம் மாநிலத்தில் சென்ற ஏழு நாட்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அசாமில் கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் 19 பேர் குணம் அடைந்துள்ளார்.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இதற்கான தடுப்பு வேலைகள் சிறப்பாக நடைபெற்று. அசாமில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 214 பேருக்கு முடிவு வரவில்லை மற்றும் சென்ற ஏழு நாட்களாக எவருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பில்லை.
மேலும் மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அசாமில் முன்னெச்சரிக்கை காரணமாக ஏப்ரல் 25ஆம் தேதி கவுகாத்தி மருத்துவ கல்லூரியில் பத்திரிகையாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு இலவச கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அசாமில் கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் 19 பேர் குணம் அடைந்துள்ளார்.