சீனாவில் மூன்று நாட்களாக புதிய நோயாளிகள் இல்லை - சீனா அரசு! முழு புசணிக்காய் சோற்றில் மறைக்கும் கதையா?
சீனாவில் மூன்று நாட்களாக புதிய நோயாளிகள் இல்லை - சீனா அரசு! முழு புசணிக்காய் சோற்றில் மறைக்கும் கதையா?

உலகம் முழுவதும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது. இதனால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோம் மற்றும் உயிரிழந்தும் வருகிறார்கள்.
தற்போது சீனாவில் இந்த தொற்று மெதுவாக குறைந்து வருகிறது மற்றும் சீனா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது சீனாவில் மூன்று நாட்களாக எந்த ஒரு புதிய நோயாளிகள் தொற்றின் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், உகானில் 55,005 பேர் ஒரு தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உகான் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த சீனாவிலும் மூன்று நாட்களாக எந்த ஒரு புதிய நோயாளிகளும் இல்லை என சீனா அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3255 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை மூடி மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.