திருப்பூர் அருகே ஒரு கிராம எல்லையில் 'வெளியூர்காரர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம்' என போஸ்டர் அடித்து அறிவிப்பு!
திருப்பூர் அருகே ஒரு கிராம எல்லையில் 'வெளியூர்காரர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம்' என போஸ்டர் அடித்து அறிவிப்பு!

உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு, பிரதமர் மோடியின் பேச்சு மற்றும் ஊரடங்கு உத்தரவு போன்ற நடவடிக்கைகளால் பட்டிதொட்டியெல்லாம் கூட பரவியுள்ளது.
இந்த நிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான் வலசின் ஊர் எல்லையில் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் ஒரு அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர். அந்த அறிவிப்பு பதாகையில் 'கொரோனா கிருமி தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் ஊரில் குடியிருப்பவர்களை தவிர வேறு வெளி நபர்கள் யாரும் உள்ளே வரவேண்டாம்" என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு பதாகையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள பகுதிகளில் உள்ள சிறிய தொழிற்சாலைகளிலும், பட்டறைகளிலும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பலர் புதியவர்களாக இருப்பதாலும், அவர்களுடன் பல உள்ளூர் இளைஞர்கள் தொடர்பில் இருப்பதாலும் அந்த கிராம மக்கள் அச்சமடைந்து இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்ற பரபரப்பு மூலனூர், காங்கேயம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.