Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவுக்கு NO! இந்தியாவுக்கு YES! பிடியில் உறுதியாக நிற்கும் மியான்மர் அரசு!!

சீனாவுக்கு NO! இந்தியாவுக்கு YES! பிடியில் உறுதியாக நிற்கும் மியான்மர் அரசு!!

சீனாவுக்கு NO! இந்தியாவுக்கு YES! பிடியில் உறுதியாக நிற்கும் மியான்மர் அரசு!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 July 2020 11:51 AM GMT

உலகின் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்நாட்டின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய வளங்கள் நிறைந்த அண்டை நாடுகளின் மீது வலை வீசுகிறது.

அதில் மியான்மர் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடாகும். மியான்மரில் எண்ணெய் வளங்களும், தாதுக்களும்,வனம் சார்ந்த செல்வங்களும், மேலும் தண்ணீர் மின்சார உற்பத்தியில் முதன்மை கொண்ட நாடாக விளங்குகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் மியான்மர் மக்கள் சீனாவின் மியான்மர் முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இவற்றில் 'மைட்ஸ்டோன்' அணை கட்டுவதை எதிர்த்து மியான்மர் மக்கள் இயற்கை வளத்தை பாதுகாக்க போராடியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது, இத்திட்டம் சீனாவை சார்ந்த நிறுவனங்கள் உடையது என்பது குறிப்பிடத்தக்கது

இது போன்று மேலும் சீனா உடைய செப்பு சுரங்கம் மற்றும் துறைமுகம் சார்ந்த முதலீடுகளுக்கு மக்கள் போராட்டம் செய்து அத்திட்டத்தை நடைபெற விடாமல் தடுத்துள்ளனர்.

இக்கட்டத்தில் சீனா மேலும் பல திட்டங்களை மியான்மரில் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. ஆனால் மியான்மர் அரசு இதைப்பற்றி கவனமாக உள்ளது ஏனெனில் கடந்த காலங்களில் இத்தகைய திட்டங்கள் அமல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் பல மில்லியன்களை இழந்துள்ளது.

இதுபோன்ற திட்டங்களை மீண்டும் கொண்டு வருவதினால் மியான்மரில் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் இதைப் பற்றி மியான்மர் அரசு கவனமாக உள்ளது என கூறி வருகிறது.

சமீபத்தில் மியான்மர் அரசு இந்திய அரசுடன் நெருங்கிய உறவாடி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாவோயிஸ்டுகளை அழிக்க மியான்மருக்கு உதவி செய்வதாகவும் உள்கட்டமைப்பு சார்ந்த தொழில்களை வளர்ச்சியடைய உதவி புரிவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

மேலும் இம்மாவோயிஸ்டுகளை சீனா வழி நடத்தி வருவதாகவும் தெரிய படுகிறது.

இது போன்ற தீவிரவாத செயல்களுக்கு சீனா துணைப்புரிந்தால் சீனா மிகப் பெரும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். மேலும் மியான்மர் போன்ற நாடுகளில் சீனாவை தவிர்த்து அண்டை நாடுகளான இந்தியாவுடன் உறவுகளை பலப்படுத்த வாய்ப்புள்ளது.

Next Story