Kathir News
Begin typing your search above and press return to search.

சீனா இறைச்சி மார்கெட்டில் கொரோனா பரவவில்லை.. அந்த ஒரு இடத்தில் இருந்து கசிந்துள்ளது - அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்!

சீனா இறைச்சி மார்கெட்டில் கொரோனா பரவவில்லை.. அந்த ஒரு இடத்தில் இருந்து கசிந்துள்ளது - அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 April 2020 1:21 PM GMT

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சி மார்க்கெட்டில் இருந்து கொரோனா குடும்பத்தைச் சார்ந்த கோவிட் 19 வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக சீனா கூறியது. எனினும், ஊஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து விஞ்ஞானிகள் கவனக்குறைவால் கொரோனா உலகிற்குப் பரவியது என்ற செய்திகளும் அடிபட்டன.

அமெரிக்காவின் அறிவியலாளர் ஸ்டீவன் மாஷர், கொரோனா பரவியதாக கூறப்படும் மார்கெட்டுக்கும், வைரஸ் ஆராய்ச்சி மையத்துக்கும் 10 மைல் தொலைவுதான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியிருதார். கவனக்குறைவால் அல்ல; வேண்டுமென்றே வைரஸ் பரப்பப்பட்டது என்ற தியரிகளும் உண்டு. ஆனால், சீன மருத்துவ சங்கத் தலைவராக இருந்தவரும் நுரையீரல் நிபுணருமான ஜோங் நான்ஷன், "கோவிட்-19 முதலில் சீனாவில் கண்டறியப்பட்டாலும், அதன் பிறப்பிடம் சீனாதான் எனச் சொல்ல முடியாது" என்றார்.

இதன் மூலம் வெளியிலிருந்து அது உள்ளே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்பதை அவர் சூசகமாகச் சுட்டிக்காட்டினார்.அமெரிக்காவும் சீனாவும் இந்த விஷயத்தில் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி வருகின்றனர். இதுகுறித்த விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனா இந்த விஷயத்தில் உண்மையா மறைப்பதாகவும், நடந்ததை ஏற்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஊஹான் பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட வவ்வால்கள் அருகில் உள்ள இறைச்சி மார்கெட்டில் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், வவ்வால்களை மார்கெட்களில் விற்பதில்லை. மேலும் உணவு விடுதிகளில் சமைப்பதும் இல்லை என புதிய தகவல்கள் கூறின. இது தொடர்பாக உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

"சீனா, அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடுக்க கொரோனா வைரஸை பரப்பவில்லை என்றாலும் வேறு ஒரு காரணம் உள்ளது என்றார். அமெரிக்க விஞ்ஞானிகளைக் காட்டிலும் சீன விஞ்ஞானிகள் வைரஸ் சோதனையில் தலைசிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள மடத்தனமாக சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர்களது அஜாக்கிரதையால் வைரஸ் வெளியே கசிந்துள்ளது" என பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News