சத்துணவு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழக அரசுக்கு நிவாரண நிதியாக வழங்க முடிவு..
சத்துணவு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழக அரசுக்கு நிவாரண நிதியாக வழங்க முடிவு..

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நூர்ஜஹான். சத்துணவு ஊழியர்கள், கொரோனா பாதிப்பு நிவாரண நிதிக்கு தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தாலும் சத்துணவு ஊழியர்கள் பணியாற்ற தயாராக உள்ளதாகவும், ஊரடங்கு உத்தரவால் உணவின்றித் தவிக்கும் ஆதரவற்றோருக்கு தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் உணவு தயாரித்து வழங்கி கொண்டு இருப்பதாகவும் தெரிவித்த அவர். அது மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் 44 ஆயிரம் மையங்களில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழக அரசுக்கு நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.