ஆஃபரில் சிக்கன் அறிவித்ததால் அலைமோதிய கூட்டம்!
ஆஃபரில் சிக்கன் அறிவித்ததால் அலைமோதிய கூட்டம்!

புதுச்சேரி, முத்தியால்பேட்டை ஜெபராஜ் நகரில் கோழிக்கறி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா நோய் வராது என்ற விழிப்புணர்வுக்காக இந்த கடையில் சிறப்பு சலுகையுடன் கறி விற்பனை அறிவிக்கப்பட்டிருந்தது, அதாவது சிக்கன் 65 ஒரு கிலோ ஐம்பது ரூபாய் என்றும் தந்தூரி முழு கோழி 60 ரூபாய் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தை பார்த்து நூற்றுக்கணக்கானோர் கடை முன்பு இன்று மதியம் கூடினார்கள் இதனால் அந்தப் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் செந்தில்நாதன் தலைமையில் போலீசார் அங்கு கூட்டம் கூடுவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் பெரிய அளவிலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த மாதிரி சலுகை விற்பனை செய்யக்கூடாது என கூறி கடையை மூட வலியுறுத்தினர்.
இருப்பினும் கடை உரிமையாளர் உடன்படாததால் தொடர்ந்து சில மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பின் அந்த கடை மூடப்பட்டது.