கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய வயது முதிர்ந்த தம்பதி..
கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய வயது முதிர்ந்த தம்பதி..

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த தாமஸ்(93) மற்றும் மரியம்மா(88) தம்பதியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இத்தாலியில் இருந்து கடந்த மாதம் நாடு திரும்பிய அவர்களின் மகனின் மூலமாக அவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து இருவருக்கும் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 9ம் தேதி முதல் ஏழு மருத்துவர் கொண்ட குழுவினர் கொடுத்த பல்வேறு கட்ட தீவிர சிகிச்சையின் காரணமாக வயது முதிர்ந்த தம்பதியர் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும், இதனையடுத்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், ஆனாலும் அவர்கள் இருவரையும் விட்டு கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாகவும் கோட்டயம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தோமஸ் மற்றும் மரியம்மா குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது அனைவரும் மீண்டு உள்ளனர் எனவே மருத்துவர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு அவரது குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்தனர்.