கொரோனாவால் ரீவைண்ட் மோடுக்கு சென்ற தொலைகாட்சிகள்.. பழைய சீரியல்கள் மீண்டும்..
கொரோனாவால் ரீவைண்ட் மோடுக்கு சென்ற தொலைகாட்சிகள்.. பழைய சீரியல்கள் மீண்டும்..

கொரோனா அச்சுறத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை. இதனால் சீரியல்கள் டி.ஆர்.பியை நம்பியிருக்கும் தொலைகாட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எடுத்து முடித்த வரை இருந்த எபிசோட்கள் கடந்த வாரத்துடன் முடிந்து விட, பார்வையாளர்களை தக்கவைத்து கொள்ள என்ன செய்யலாம் என்று யோசித்த தொலைகாட்சி நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் தொலைகாட்சிகளில் ஹிட்டடித்த நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை தூசி தட்டி ஒளிபரப்பி வருகின்றனர்.
அந்த வகையில் 'மகாபாரதம்', 'ராமாயணம்' ஆகியவற்றை கையிலெடுத்தது தூர்தர்ஷன். அதனை தொடர்ந்து விஜய் தொலைகாட்சி 'பிக் பாஸ்' சீசன் 3யையும், சன் தொலைகாட்சி 'மெட்டி ஒலி' தொடரியும் ஒளிபரப்ப துவங்கியுள்ளது. அடுத்து தூர்தர்ஷன் 90ல் கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமாக விளங்கிய 'சக்தி மான்' தொடரை ஒளிபரப்பு செய்ய விருப்பதாக அறிவித்துள்ளது.