#FactCheck: போலி வீடியோவை பரவவிட்டு, காஷ்மீரில் வன்முறை வெடிக்க திட்டமிடும் பிரிவினைவாத போராளிகள் - வெளியான நெத்தியடி ஆதாரம்!
#FactCheck: போலி வீடியோவை பரவவிட்டு, காஷ்மீரில் வன்முறை வெடிக்க திட்டமிடும் பிரிவினைவாத போராளிகள் - வெளியான நெத்தியடி ஆதாரம்!
By : Kathir Webdesk
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், வைரல் வீடியோ வீண் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு கடும் போராட்டங்கள் வெடித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவ்வாறு பெண்கள் கூட்டம் ஒன்று கடும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோக்களின் தலைப்பில், ஆயிரக்கணக்கான காஷ்மீரிக்கள் தங்களது நிலத்தை பாதுகாத்துக் கொள்ள வீதிகளில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை பலர் தங்களது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோ ஸ்கிரீன்ஷாட்களை ரிவர்ஸ் சர்ச் செய்ததில் இதே வீடியோ ட்விட்டர் மற்றும் யூடியூப் தளங்களில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் ஆண்டு முதன் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
39 நொடிகள் ஓடும் வீடியோவில் பெண்கள் போராட்டம் நடத்தும் பகுதி பாரமுல்லா சென்ட்ரல் கோ ஆப்பரேட்டிவ் வங்கி அமைந்துள்ள ஹஜின் பகுதி என தெரிகிறது. அந்த வகையில் இந்த கூட்டத்திற்கும் தற்போதைய சட்டப்பிரிவு சார்ந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.