Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோயில் கட்டுவதற்காக தன்னுடைய அறக்கட்டளை சார்பாக ஒரு கோடி ரூபாய் - உத்தவ் தாக்கரே அறிவிப்பு

ராமர் கோயில் கட்டுவதற்காக தன்னுடைய அறக்கட்டளை சார்பாக ஒரு கோடி ரூபாய் - உத்தவ் தாக்கரே அறிவிப்பு

ராமர் கோயில் கட்டுவதற்காக தன்னுடைய அறக்கட்டளை சார்பாக ஒரு கோடி ரூபாய் - உத்தவ் தாக்கரே அறிவிப்பு
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 March 2020 9:11 AM IST

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் நேற்று செய்தியாளரை சந்தித்து சிவசேனா தலைவரும் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே நாளை அயோத்தி செல்லவுள்ளார் எனவும் ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அங்கே சரயூ நதிக்கரையில் நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்திருந்தார், அதன்படி இன்று உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றார் அங்கு ராமர் பிறந்த இடமான ராம் லல்லா இடத்திற்கு சென்று வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடந்த ஒன்றரை வருடத்தில் நான் அயோத்தி வருவது மூன்றாவது முறை என்றும் பகவான் ராமனின் அருளைப் பெற நான் இங்கு வந்திருப்பதாகவும் மேலும் ராமர் கோயில் கட்டுவதற்காக மகாராஷ்டிரா மாநில அரசாங்கம் சார்பில் இல்லாமல் தன்னுடைய அறக்கட்டளை சார்பாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News