Kathir News
Begin typing your search above and press return to search.

பினராயி விஜயனின் இராஜதந்திரங்கள் அனைத்தும் தோற்றுவிட்டதா..? 18பேருக்கு சோதனை செய்தால் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிறது - திணறும் கேரளா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2020 1:28 PM GMT

18பேருக்கு சோதனை செய்து பார்த்தால், அதில் ஒருவருக்கு கொரோனா உறுதியாவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த விஜயன், திருவனந்தவுரத்தில் பதிவாகும் கொரோனா பாதிப்பின் விகிதம் மாநில சராசரியை விட மிக அதிகம் என்றார்.

சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு 18 பேரில் ஒருவருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் மொத்த மாநிலத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளும் போது, 36பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிறது என்று கூறியுள்ளார்.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு முயற்சிகள் குறித்து விரிவாகக் கூறிய முதலமைச்சர், ஜூலை 5 ம் தேதி பூந்துராவில் முதல் கொரோனா பரவல் தீவிரமாக வெடித்தது. அங்கு தீவிர பரவல் உறுதிசெய்யப்பட்ட உடனேயே கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

கடலோரப் பகுதிகளான வாலியதுரா, அஞ்சுதேங்கு, சிராயின்கீஷு, நயாட்டின்காராவில் உள்ள குலத்தூர், பனவூர், கடக்காவூர், பெருமத்துரா மற்றும் புதுக்குரிச்சி ஆகிய இடங்களில் இன்னும் கூடுதலான பாதிப்புகள் தென்படுகின்றன. இது தவிர, பரஸ்ஸலா, குன்னத்துக்கல், பட்டோம், பெருங்கடவில, பலராமபுரம், கட்டகடா உள்ளிட்ட பிற இடங்களிலும் நோயின் தாக்கம் பரவலாக காணப்படுகிறது.இந்த பகுதிகளில் கண்காணிப்பு, சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று விஜயன் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News