Top
undefined
Begin typing your search above and press return to search.

சீன எதிர்ப்பு மனநிலையைப் பயன்படுத்தி அமெரிக்க பின்னலாடை சந்தையைக் கைப்பற்றுமா இந்தியா? கோவை பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஆர்வம்?!

சீன எதிர்ப்பு மனநிலையைப் பயன்படுத்தி அமெரிக்க பின்னலாடை சந்தையைக் கைப்பற்றுமா இந்தியா? கோவை பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஆர்வம்?!

ஏந்திழைBy : ஏந்திழை

  |  19 Sep 2020 1:39 AM GMT

உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்காவில், நிலவும் சீன எதிர்ப்பு மன நிலையை முழுதாகப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க பின்னலாடை சந்தையை கைப்பற்றுமாறு டெக்ஸ்டைல் நிறுவனங்களின் கூட்டமைப்பு தொழில் முனைவோருக்கு அறிவுறுத்தியுள்ளது. முன்னர் அமெரிக்க பின்னலாடை சந்தையில் சீனா பெரும் பங்கு வகித்த நிலையில் தற்போது அதன் ஆதிக்கம் குறைந்து வருவதாகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு ₹ 20,000 கோடி ரூபாய் அளவுக்கு சீனாவின் சந்தை மதிப்பு சரிவைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஏழு மாதங்களில் அமெரிக்க சந்தையில் பின்னலாடைகள் இறக்குமதி 30% சரிவை சந்தித்துள்ள நிலையில் அதில் 49% சீன‌ நிறுவன தயாரிப்புகள் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா- சீனா இடையே நடந்துவந்த வர்த்தக போராலும் அதன் பின்னர் ஆகான் மாகாண ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸை சீனா பரப்பியதாக அமெரிக்கா நம்புவதாலும் சீன நிறுவனங்கள் மீது பல வர்த்தக தடைகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தயாரிக்கப்படும் பின்னலாடைகளை இறக்குமதி செய்ய அங்கு உய்குர் முஸ்லிம்கள் மீது சீன அரசு செய்யும் அடக்குமுறையை காரணமாகக் காட்டி அமெரிக்க அரசு தடை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்தே பரவியதாக உலக நாடுகள் பலவும் நம்புவதால் சீனாவுக்கு எதிரான மனநிலை வலுத்து வருகிறது. இதனால் பின்னலாடை சந்தையில் பெரும் வெற்றிடம் ஏற்படும் எனவும் இது இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் இந்தத் துறையில் 10 பில்லியன் டாலர் அளவிற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் எனவும் கருதப்படுகிறது. பின்னலாடை ஏற்றுமதி சந்தையில் இந்தியாவுக்கு போட்டியாளர்களாக விளங்கும் வியட்நாம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஐரோப்பிய யூனியன் உடன் இலவச வர்த்தகம் மற்றும் சுங்க வரி விலக்கு ஆகிய வர்த்தக உடன்படிக்கைகளை கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அமெரிக்கா விஷயத்தில் அனைத்து போட்டி நாடுகளுக்கும் ஒரே நிலைதான் என்பதால் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கடந்த இரண்டு, மூன்று மாதங்களில், முன்னதாக சீனாவில் இருந்து பின்னலாடைகளை இறக்குமதி செய்து வந்த பல அமெரிக்க விற்பனையாளர்கள் இந்திய உற்பத்தியாளர்களிடம் வணிகம் செய்வது பற்றி பேசி வருவதால் இது இந்திய பின்னலாடை துறைக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story