ஒரிசா மாநிலத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பு!
ஒரிசா மாநிலத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது, ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையிலும் கொரோனா வேகமாக பரவி வருவதாலும் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என பல மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஒரிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஒரிசா மாநிலத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கவும், மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களும் ஜூன் 17-ம் தேதி வரை மூடப்படுவதாக கூறிய அவர், மத்திய அரசை விமானம் மற்றும் ரயில்வே போக்குவரத்தை ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடங்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டிலேயே ஒரிசா மாநிலம் தான் முதல்யில் ஊரடங்கை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/ANI/status/1248141870204628992?s=19