Kathir News
Begin typing your search above and press return to search.

மாஸ்டர் படம் OTT-யில் வெளியாக வாய்ப்பு உள்ளதா? இல்லையா? - மனம் திறக்கிறார் தயாரிப்பாளர்!!!

மாஸ்டர் படம் OTT-யில் வெளியாக வாய்ப்பு உள்ளதா? இல்லையா? - மனம் திறக்கிறார் தயாரிப்பாளர்!!!

மாஸ்டர் படம் OTT-யில்  வெளியாக வாய்ப்பு உள்ளதா? இல்லையா? - மனம்  திறக்கிறார் தயாரிப்பாளர்!!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 July 2020 12:09 PM GMT

படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ என்பவர் தனியார் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார்.

அப்போது அவர் மாஸ்டர் படம் OTT-யில் வருமா இல்லையா என்ற தகவலை கூறியுள்ளார்.

"கைதி" படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரப்போகும் அடுத்த படம் *மாஸ்டர்* இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்ட பணிகளும் நிறைவடைந்துள்ளன. கொரோனா பிரச்சினை மட்டும் இல்லை என்றால் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. தியேட்டர்கள் திறக்காத நிலையில் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. மேலும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிடலாம் என்ற நோக்கில் இருந்தனர். இன்னும் கொரோனா பிரச்சனை நீண்டு கொண்டே செல்வதால் அப்பொழுதும் வெளியிட முடியவில்லை.

இதுகுறித்து பிரபல OTT நிறுவனம் 'மாஸ்டர்' பட தயாரிப்பாளரை அணுகியதாகவும் இதனால் ஓடிடி தளத்தில் படம் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து பிரபல ஊடகம் ஒன்றில் இது பற்றி கேள்வி எழுப்பிய போது அவர் OTT-யில் வெளியிட வாய்ப்பே இல்லை எனக் கூறினார். மாஸ்டர் படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப்படும் என்றார்.

Next Story