Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவிலிருந்து மேலும் ஆறு P-8I விமானங்களை வாங்க இந்தியா முடிவு - சீனா அதிர்ச்சி?

அமெரிக்காவிலிருந்து மேலும் ஆறு P-8I விமானங்களை வாங்க இந்தியா முடிவு - சீனா அதிர்ச்சி?

அமெரிக்காவிலிருந்து மேலும் ஆறு P-8I விமானங்களை வாங்க இந்தியா முடிவு - சீனா அதிர்ச்சி?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 12:02 PM GMT

இந்திய ஆயுதப்படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து 1.௮ பில்லியன் டாலர் செலவில் ஆறு போசிடான் 8I (P-8I) விமானங்களை வாங்கும் செயலை இந்தியா தொடங்கியுள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட விண்வெளி நிறுவனமான போயிங்கினால் கட்டப்பட்ட P-8I விமானங்களில் எட்டு ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்புப் பயன்பாட்டில் உள்ளது. கிழக்கு லடாக் பகுதியிலும் P- 8I விமானம் சீன நடவடிக்கைகளை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2009 ல் முதன்முதலில் எட்டு விமானங்களை 2.1 பில்லியன் டாலரிலும், மேலும் நான்கு விமானங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு, டிசம்பர் இறுதியில் டெலிவரி தொடங்கவுள்ளது. இந்த பன்னிரண்டு P-8I தவிர, மேலும் ஆறு P-8I விமானங்களை வாங்க Pentagon's foreign military sales(FMS), கீழ் ஒப்பந்தம் செய்ய இந்தியா, அமெரிக்காவிற்கு கோரிக்கை கடிதம் வழங்கியுள்ளது.

P-8I விமானம் ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக் சென்சார்களால் நிரம்பியுள்ளது. Harpoon block - 2 மற்றும் எம். கே-54 இலகுரக டார்பிடோக்களை கொண்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News