டெல்லி வன்முறை பற்றி ட்விட்டரில் பதிவு செய்த பா.ரஞ்சித்துக்கு தக்க பதிலடி கொடுத்த - காயத்ரி ரகுராம்!
டெல்லி வன்முறை பற்றி ட்விட்டரில் பதிவு செய்த பா.ரஞ்சித்துக்கு தக்க பதிலடி கொடுத்த - காயத்ரி ரகுராம்!

டெல்லியில் நடந்து வரும் வன்முறையை பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். "தேசத்தின் தலைநகரில் வகுப்புவாத பாசிச சக்திகள் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமளிக்கிறது.இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. ஆளும் பாஜக அரசாங்கம் இந்த நாட்டை அடிப்படைவாதத்திற்கு திட்டமிட்டு திருப்பி வருகிறது, அதேபோல் தமிழ்நாட்டிலும் முயற்சி செய்கிறது. பாசிசத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்".
மேலும் பா.ஜ.க பிரமுகரும் மற்றும் நடிகையுமான காயத்ரி ரகுராம் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் பதிவுக்கு பதில் அளித்துள்ளார்."மதச்சார்பின்மையின் பொருள் என்ன? மதச்சார்பின்மை இந்துக்களுக்கு மட்டுமே பொருந்துமா?நம் நாட்டில் இருக்கும் ஊழலில் ஊறிப்போன அமைப்புகளை சரி செய்து வருகிறது பா.ஜ.க. பெரியாரின் கூலி மாமா ஆகிய நீங்கள் இந்து மதத்தை அழிக்கிறீர்கள். காங்கிரஸ் பாகிஸ்தானின் கைக்கூலியாக விளங்கி இந்துக்களை அழித்து வருகிறார்கள். நீங்கள் தன இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு வருகிறீர்கள்".