Kathir News
Begin typing your search above and press return to search.

அடங்கவே அடங்காது!! காஷ்மீர் விவகாரத்தில் பயங்கரவாதத்தை கையிலெடுத்த பாகிஸ்தான் - ஏவி விடப்பட்ட பிரிவினைவாதிகள்!

அடங்கவே அடங்காது!! காஷ்மீர் விவகாரத்தில் பயங்கரவாதத்தை கையிலெடுத்த பாகிஸ்தான் - ஏவி விடப்பட்ட பிரிவினைவாதிகள்!

அடங்கவே அடங்காது!! காஷ்மீர் விவகாரத்தில் பயங்கரவாதத்தை கையிலெடுத்த பாகிஸ்தான் - ஏவி விடப்பட்ட பிரிவினைவாதிகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Oct 2019 2:32 PM GMT


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் இந்திய எல்லையை நோக்கி பேரணி நடத்தியதால், இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.


ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்பு சிறப்பு விதியை மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றுக்கொண்டது. இதனை தொடர்ந்து காஷ்மீரில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பிரிவினைவாதிகள் வன்முறையை தூண்டிவிட்டு அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான், பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்று, படு தோல்வி அடைந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்களை, இந்தியாவுக்கு எதிராக, பயங்கரவாத அமைப்புகள் துாண்டி விட்டுள்ளன. ஏற்கனவே பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதை உலக நாடுகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் வெளிப்படையாகவே தீவிவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து இந்தியாவை நோக்கி ஏவி விட்டுள்ளது.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி இந்திய எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர். முஜாப்பராபாதில் இருந்து புறப்பட்ட இளைஞர்கள், கார்கி என்ற பகுதியை அடைந்தனர். இதன் பின், முஜாப்பராபாத் - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இளைஞர்கள், மாலையில், சகோதி என்ற பகுதியை அடைந்தனர்.


இதனை JKLF என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவன் யாசின் மாலிக் வழி நடத்தி சென்றுள்ளான். கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்து பேசியதை தொடர்ந்தே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காஷ்மீருக்காக எல்லை தாண்டி செல்ல வேண்டாம் என்று கூறிய பிறகே ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்த்தவர்கள் இந்திய எல்லையை நோக்கி வந்துள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மென்மையான போக்கை கடைபிடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் தனக்கே உரித்தான பாணியில் பயங்கரவதத்தை கையில் எடுத்திருப்பது அந்நாட்டின் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News