Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தானில் பயிற்றுவிக்கும் பாகிஸ்தான்.!

இத்தகைய தாக்குதல்கள் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் நடத்தப்படும்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தானில் பயிற்றுவிக்கும் பாகிஸ்தான்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2020 11:48 AM GMT

பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சர்வீஸ் குழு (SSG) 20 ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லக்ஷர் ஈ தொய்பா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்து யூனியன் பிரதேசமாக மாற்றி ஒரு வருடம் ஆகஸ்ட் ஐந்துடன் நிறைவடையும் நிலையில் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக இந்த பயிற்சி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

உளவுத்துறை வட்டாரங்களில் கூற்றுப்படி பாகிஸ்தான் ராணுவத்தின் SSG, எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் திறமை பெற்றது. அது ஒவ்வொரு குழுவிற்கும் 4 முதல் 5 தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைப்பகுதியிலும், சர்வதேச எல்லை வழியாகவும் இந்தியாவிற்குள் ஊடுருவ பயிற்சி கொடுத்து வருகிறது.

இத்தகைய தாக்குதல்கள் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் நடத்தப்படும் என்றும் அவர்கள் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார்.

வட்டாரங்களின் தகவல் படி, முறையாக பயிற்சி பெற்ற லக்ஷர் ஈ தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பாகிஸ்தானில் தயாராக இருப்பதாகவும் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அமைப்புகள் கருத்துப்படி, அவர்கள் ஜம்முவின் வழியாகவும், பலவீனமான புள்ளிகளின் வழியாகவும், பஞ்சாப் வழியாகவும் உள்நுழைய வாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறார்கள்.

ஒரு உள்ளூர் இளைஞன் உட்பட, 3 தீவிரவாதிகள் எல்லை பாதுகாப்பு படையை (BSF) காஷ்மீரில் தாக்க இருப்பதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புத்துறை வட்டாரங்களின் படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லைப் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோல ஊடுருவ நடந்த முயற்சிகள் குப்வாரா மாவட்டத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றன.

காஷ்மீரை மையமாகக் கொண்ட மற்றொரு தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீனின் பாகிஸ்தானை அடித்தளமாகக் கொண்ட தலைவர் செய்யது சலாகுதீன் சமீபத்தில் ஒரு ஆடியோ வழியாக காஷ்மீர் மக்களை இஸ்லாமின் பெயரில் ஆயுதங்களை எடுத்து இந்தியாவிற்கு எதிராக போர் செய்யுமாறு தூண்டினார்.

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது காஷ்மீரில் மட்டுமல்லாது ஆப்கானிஸ்தானும் தன்னுடைய தீவிரவாத நடவடிக்கைகளை செய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில், 13 பாகிஸ்தான் குடிமகன்கள் உட்பட 31 தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட ஒரு ஆபரேஷனில் கொலை செய்யப்பட்டனர்.

ஐ.நா பாதுகாப்பு சபையின் ஜூன் மாதத்தில் அறிக்கையின்படி தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைப்பது மட்டுமல்லாமல், காஷ்மீரை குறிப்பாக கொண்ட பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லக்ஷர்-ஈ-தொய்பா தங்களுடைய தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி, அரசியல் படுகொலைகளை செய்கின்றனர். இதேபோன்று 6500 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

இதை தொடர்ந்து பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் ஜெய்ஷ்-இ-முகமது, லக்ஷர்-ஈ-தொய்பா, அல்கொய்தா, இந்தியத் துணைக்கண்ட அல்கொய்தா, தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான், ISIS-K ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு சரணாலயமாக திகழ்வதாக குறிப்பிடப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News