Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானில் அரசாங்க உத்தரவுகளை மதிக்காமல் மதவாதிகளின் வழியில் மதி கெட்டு செல்லும் மக்கள், உலக நாடுகள் வேதனை.!

பாகிஸ்தானில் அரசாங்க உத்தரவுகளை மதிக்காமல் மதவாதிகளின் வழியில் மதி கெட்டு செல்லும் மக்கள், உலக நாடுகள் வேதனை.!

பாகிஸ்தானில் அரசாங்க உத்தரவுகளை மதிக்காமல் மதவாதிகளின் வழியில் மதி கெட்டு செல்லும் மக்கள், உலக நாடுகள் வேதனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 April 2020 6:17 AM GMT

பாகிஸ்தானில் கொரோனா நோயால் இதுவரை 5,300 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது வரை 100 பேர்வரை கொரோனாவால் பலியாகி உள்ளார்கள். இது கிட்டத்தட்ட இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்று மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேலாகும்.

இந்தியாவுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் மிகவும் சிறிய நாடாகும், இந்தியாவில் 130 கோடி மக்கள், ஆனால் பாகிஸ்தான் மக்கள் தொகை 21 கோடிதான்..ஆனாலும் பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது என்பதை அந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவில்லை, இதனால் கொரோனாவை கட்டுப் படுத்தும் இம்ரான் அரசின் நடவடிக்கைகள் பயனில்லாமல் போவதாக உலகளாவிய செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இதற்கு காரணம் மக்களில் அநேகம் பேர் படித்தவர்களாக இருந்தாலும், விவரங்கள் தெரிந்தவர்களாக இருந்தாலும் மசூதிகள் மற்றும் மத தலைவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை மட்டுமே ஏற்கும் பழமை வாதம் இன்னும் பல பேரிடம் உள்ளதுதான் எனக் கூறப்படுகிறது.

இதனால் சென்ற வெள்ளிக்கிழமை கூட ஏராளமான மசூதிகள், பள்ளிவாசல்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஏராளமான போலீசார் கையில் ஒலிபெருக்கிகளை வைத்து எச்சரிக்கை செய்தும் பிரயோஜனம் இல்லை என்றும் மத்திய பாகிஸ்தான் நகரமான முல்தானில் உள்ள ஒரு மசூதியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் வருகை தருகிறார்கள் என்றும் அவர்கள் முக மூடி இல்லாமல் பிரார்த்தனை செய்வதாக சபீர் துரானி என்பவர் கூறுகிறார்.

மேலும் பாகிஸ்தான் அரசு சென்ற மாத இறுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மத சபைகளுக்கு தடை விதித்து இருந்தாலும் அந்த சபைகளில் அரசு உத்தரவுகள் மீறப்படுவதாக கூறியுள்ளார். தன்னாலும் மத சபைகளுக்கு போகாமல் இருக்க முடியவில்லை என்று கூறிய அவர்,

"எங்கள் மசூதியின் பிரார்த்தனை நடத்தும் தலைவர், வைரஸ் மேற்கத்திய மக்களைப் போலவே நம்மைப் பாதிக்க முடியாது, நாம் நம் கைகளை கழுவுகிறோம், நாம் பிரார்த்தனைகளைச் சொல்வதற்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை முகத்தை கழுவுகிறோம், மேலும் இங்கு காஃபிர்கள் இல்லை, எனவே நாம் கவலைப்பட தேவையில்லை, கடவுள் நம்மோடு இருக்கிறார்." என்று அவர் கூறுவதாக கூறினார்.

20 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் பாகிஸ்தானில் இஸ்லாமிய மத தீவிரம் அபரிமிதமான செல்வாக்கைக் கொண்டுள்ளது. மதக் கட்சிகள் தேர்தல் அரசியலில் வெற்றிபெறவில்லை, ஆனால் இந்த மதம் சார்ந்த கட்சிகளால் சமய வெறியை தூண்டி ஒரு மிகப்பெரிய வன்முறைக் கூட்டத்தை கூட்ட முடியும் என்பதால் அரசு இவர்களை கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாக உள்ளது.

குறிப்பாக பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு உதவியாளர் மிர்சா ஷாஜாத் அக்பர் அதிகம் படித்தவர். ஆனால் ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்களிடம் இவர் கூறுவதை கேட்டால் ஆச்சரியமாக உள்ளது. "மதமும் பிரார்த்தனையும் பாகிஸ்தானில் உள்ள பலருக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சினை, அரசாங்கம் அதை உணர வேண்டும்" என்று அவர் கூறியது செய்தியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் வழக்குகளில் 60% க்கும் அதிகமானவை மத்திய கிழக்கு ஆசிய பகுதிகளில் உள்ள மெக்கா, மதீனா போன்ற புனித யாத்திரைகளிலிருந்து திரும்பி வரும் முஸ்லிம்களுடனும், மரபுவழி மதமாற்றம் செய்யும் குழுவான தப்லிகி ஜமாஅத்தை பின்பற்றுபவர்களுடனும் தொடர்புள்ளவை என அந்த நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

ஆனால் எந்த வித கவலை, எச்சரிக்கைகள் இல்லாமல் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில், இஸ்லாமிய ஜமாத்துகளில் நடைபெறும் சபை பிரார்த்தனைகளில் ஏராளமான கூட்டம் சேர்கிறது. புனித ரமலான் மாதம் இரண்டு வாரங்களுக்குள் தொடங்குவதால் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது, இதை சமாளிக்க காவல்துறை அதிகாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

மத பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், பல மத போதகர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் அரசு தடையை எதிர்த்து வருகின்றனர்.

கடந்த வாரம் நடை பெற்ற ஒரு இறுதி சடங்கில் தடைகள் எச்சரிக்கைகளை மீறி நூற்றுக் கணக்கானோர் ஓன்று திரண்டனர். அப்போது ஒரு மதக் கட்சியின் முக்கிய தலைவரான முப்தி கபாயத்துல்லா கூட்டத்தில் கூறுகையில், சபைகளை கட்டுப்படுத்தும் அரசாங்க உத்தரவுகள் ஏற்கத்தக்கது அல்ல, அந்த உத்தரவுகளை வீசி எறியுங்கள் என்று கூறினார்.

மேலும், "நீங்கள் இதைச் செய்தால், அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பேரில் மசூதிகள் வெறிச்சோடிப் போகின்றன என்று நாங்கள் நினைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போம் என்றும், நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம், ஆனால் எங்கள் மசூதிகளை விட்டு வெளியேறத் தயாராக இல்லை." என்றார்.

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மசூதியில் பிரார்த்தனைகளை நிறுத்த முயன்ற போலீசார் தொடர்ந்து இரண்டாவது வாரமாக கடுமையாக தாக்கப்பட்டனர். மோதல்களில் ஒரு பெண் போலீஸ் படு காயமடைந்தார், அப்போது கும்பலை கலைக்க ஒரு கூட்டத்தின் மீது போலீசார் ஏர் கன்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

சென்ற மார்ச் 27 அன்று, கராச்சியில் மசூதி நிர்வாகங்களுக்கு எதிராக அதிகாரிகள் 88 வழக்குகளை பதிவு செய்தனர். மேலும் வெள்ளிக்கிழமை கட்டுப்பாடுகளை மீறியதற்காக 38 பேரை கைது செய்தனர், ஆனால் ஒரு நாள் கழித்து குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன, மக்கள் விடுவிக்கப்பட்டனர்.

பாகிஸ்தானின் பல நகரங்களில், கிராமங்களில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை போலீசார் கண்டு கொள்வதே இல்லை என்றும், அப்படியே கண்டு கொண்டாலும் எவ்வித பிரயோஜனமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. கிராமப்புறங்கள் இன்னும் மோசம், அவை தனி பிரதேசங்கள் போல கட்டு மீறி உள்ளதாக கூறப்படுகிறது.

பல நகரங்களில் டுவிட்டர், வாட்ஸ் அப், பேஸ் புக் மூலம் அல்லா அழைக்கிறார், மசூதி அழைக்கிறது, முஸ்லிம்கள் அழைக்கிறார்கள் என்று அழைப்பு விடுத்து கூட்டம் கூட்டி நாசம் செய்கிறார்கள் என்றும் பாகிஸ்தான் விரைவில் ஒரு கொடூரமான கொரோனா நாடாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், எந்த நடவடிககைகளையும் எடுக்காமல் போனால் அந்த நாட்டை மற்ற நாடுகள் தீண்டத்தகாத நாடாக ஒதுக்கி வைக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம் என்றும் உலக நாடுகள் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Source: https://www.reuters.com/article/us-health-coronavirus-pakistan-congregat/god-is-with-us-many-muslims-in-pakistan-flout-the-coronavirus-ban-in-mosques-

Next Story
கதிர் தொகுப்பு
Trending News